Tuesday, March 12, 2013


1924-ஆம் ஆண்டு ஜனவரி27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய 
நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக
வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடியும் ஒரு மனிதரின்
உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் 
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும்
கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர்
சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக்
காட்சிகள் நடக்கின்றன.

அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள

உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும்
சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான
அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது.
பெரியவர்களும் , குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி
வைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.
கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பளங்களால்
மூடப்பட்டிருந்தன.

சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “அனைவரும் எழுந்து

நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் உடல் அடக்கம் செய்யியபடுகிறது .”
சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க  ஐரோப்பியநாடுகளின்தொழிலாளர்கள் எழுந்து நின்றனர்ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின்தொழிலாளர்கள் எழுந்து நின்றனர்.ஐந்து நிமிட மெளன அஞ்சலி
. செலுத்தப்பட்டது.

 

உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம்
இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி
விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி அவருக்குப்
பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மாரியாதை கிடைக்கவில்லை.

எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை
மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது.
சோவியத் ரசியாவின் தலைவருக்காக உலகமே ஏன் அழ வேண்டும்? அப்படி என்னசெய்துவிட்டார் அவர்?


2. வறுமையை ஒழித்த லெனின்

எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கே பணக்காரர்கள் இருப்பார்கள்.
அதுபோலவே ஏழைகளும் இருப்பார்கள். ஒருவன் பணக்காரன் என்றால், 100 பேர்
ஏழைகள். இந்த ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி பணக்காரர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். உழைக்கும் மக்கள் மேலும் மேலும் வறுமையில்
வாடிக்கிடப்பார்கள். ரசியாவிலும் ஒரு காலத்தில் மக்கள் அப்படித்தான்
துன்பத்தில் வாழ்ந்தனர்,

இந்த அநியாயத்தை ஒழித்துக் கட்டியவர்தான் லெனின். அவருடைய தலைமையில்
1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற புரட்சியினால்
தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி மலர்ந்தது. உலகில் முதன்முறையாக
தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அந்த தொழிலாளர்களின் ஆட்சிதான்
உலகில் எங்குமே நடக்காத சாதனைகளை நிகழ்த்தியது. மனிதனை மனிதன்
சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது. தேசத்தின் வளங்களை ஒரு
சிலர் மட்டும் அனுபவிப்பது முடிவுக்கு வந்தது. அவை அனைவருக்கும்
பொதுவாக்கப்பட்டது. வயது வந்த அனைவருக்கும் திறமைக் கேற்ற வேலையும்,
வேலைக்கேற்ப ஊதியமும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இலவச கட்டாயக்
கல்வி அளிக்கப்பட்டது. சமத்துவச் சமூகம் படைக்கப்பட்டது.

இவை அனைத்தும் லெனினுடைய தலைமையில் நடந்தது. இதன் மூலம் தன்னுடைய
நாட்டில் வறுமையை ஒழித்துக் கட்டினார். மற்ற நாடுகளிலுள்ள உழைக்கும்
மக்களின் கவனம் சோவியத் ரசியாவை நோக்கித் திரும்பியது. லெனினுடைய
வழியைப் பின்பற்றினால் மட்டுமே தங்களின் வறுமை ஒழியும் என்று அவர்கள்
நம்பினர். தங்களின் நல்வாழ்விற்காக போராடத் தயாராக இருந்த உலகத்
தொழிலாளர்களுக்கு லெனின் சரியான வழி காட்டினார். ஆனால் ரசிய

மக்களுக்குக் கிடைத்த வெற்றி உலகத்திலுள்ள அனைவருக்கும் கிடைப்பதற்கு
முன்னரே அவர் மரணமடைந்து விட்டார்.

இதனால்தான் அவருடைய மரணத்துக்கு உலகமே அழுதது. உலகின் ஆறில் ஒரு பகுதி
நிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற நன்றியும், மீதி நிலப்பரப்பில்
அதை நிறைவேற்றும் முன்னரே இறந்து விட்டாரே என்ற துக்கமும்தான் உலகத்
தொழிலாளர்களை கண்ணீர் சிந்த வைத்தது.

3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்

லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில்
பிறந்தார். அவருடைய தந்தையான இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாக

பணி புரிந்தார். நேர்மையான மனிதர். தாயார் மரியா உல்யானவ் அன்பே
வடிவானவர். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன்
உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதரர்கள், மூன்று சகோதரிகள் 

லெனினுடைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அறிவுடையவர்களாகவும்,
பண்புடையவர்களாகவும் வளர்த்தனர். மேலும் தங்கள் சக மனிதர்களை
நேசிக்கவும் கற்றுக் கொடுத்தனர். நேர்மையான அதிகாரியான தங்கள்

தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள்
பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு இரவும் அருமையான
கதைகளைச் சொல்வார்.

சிறு வயது லெனின் மிகுந்த குறும்புக்காரர் . தனக்கு பள்ளியில் கொடுத்த 

 வீட்டுப்பாடங்களைவிரைவில் முடித்துவிட்டுக்
 குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடைய
குறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும்
விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவரான லெனின் படிப்பிலும்

விளையாட்டிலும் முதலிடத்தில் இருந்தார்.

அவர்தன் அண்ணனான அலெக்சாண்டர் மீது மிகுந்த பாசமும், மதிப்பும்
கொண்டிருந்தார். அலெக்சாண்டருக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம்
அதிகம். சகோதரர்கள் இருவரும், உலகம் எப்படி தோன்றியது? உயிர் எப்படி
தோன்றியது? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க விவாதிப்பார்கள்.
நிறைய புத்தகங்கள் படித்ததன் விளைவாக அலெக்சாண்டருக்கு ஏராளமான
விசயங்கள் தெரிந்திருந்தன. எதிர்காலத்தில் தன் அண்ணனைப் போலவே தானும்

அறிவாளியாக வர வேண்டுமென்று லெனின் தீர்மானித்துக் கொண்டார். அதற்கா ககையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தார்.


இப்படி மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்வில் முதல் இடி
விழுந்தது. திடீரென ஒருநாள் தந்தை இறந்து போனார். அந்த அடியிலிருந்து
மீள்வதற்குள் அடுத்த இடி தாக்கியது. ரசியாவில் கொடுங்கோலாட்சி
நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனைக் கொல்ல முயற்சி செய்ததற்காக
அலெக்சாண்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த செய்தியால்
குடும்பம் நிலைகுலைந்து போனது.

அலெக்சாண்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாளில் லெனினுக்குப்
பள்ளியில் இறுதித் தேர்வுகள் நடைபெற்றது. அந்தக் கொடூரமான
துக்கத்தினால் லெனின் துவண்டு போகவில்லை. தேர்வு முடிவுகளில்
மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறினார். இது அவருடைய உருக்கு போன்ற மனவலிமைக்கு ஒரு சான்று.


4. வக்கீல் உருவில் ஒரு போராளி!

லெனின் தன்னுடைய உயர் படிப்பைப் தொடர கசான் என்ற நகரின் பல்கலைக்

கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஜார் மன்னனுக்கு எதிராக
மாணவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். ஜார் தேசத்தின் வளங்களை சூறையாடி
ஆடம்பரமாக செலவு செய்தான். மக்களையோ வறுமையில் தள்ளினான். அவர்களின்
உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தான். மன்னன் சட்டத்திற்கு உட்பட்டு

நியாயமாக ஆட்சி நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கை.

மாணவர்களின் போராட்டத்தை வன்முறையால் ஒடுக்கினான் ஜார். மன்னன் மாணவர்கள் குற்றவாளிகளைப் போல கண்காணிக்கப்பட்டனர்.

 கசான் பல்கலைக்கழகம் சிறைச்சாலை போல மாற்றப்பட்டது.
 மாணவர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. 

தன்மானமுள்ள மாணவர்கள் இதை எதிர்க்கத் தீர்மானித்தனர்.
ஒட்டு மொத்தமாக பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறினர். லெனினும்
வெளியேறினார்.

பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய லெனின், ஜார் ஆட்சியின்
கொடுமைகளை அனுபவத்தின் மூலம் புரிந்துகொண்டார். ஒடுக்கப்பட்ட

மக்களுக்காக போராடத் தீர்மானித்தார். வழக்கறிஞர் தொழிலின் மூலம் அதை
செய்யத் திட்டமிட்டார். எனினும் சட்டக்கல்லூரியில் அவரை சேர்த்துக்

கொள்ள மறுத்தனர். லெனின் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். 
வீட்டில் இருந்தே படித்தார். நான்கு வருட சட்டக்கல்வியை ஒன்றரை ஆண்டில் படித்து முடித்துப் பட்டம் பெற்றார். அதிலும் மாநிலத்தில் முதலாவதாக.வந்தார் லெனின் 


அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் மேலும் ஒரு துக்க செய்தி அவரது தங்கை
ஓல்கா நோயினால் மரணமடைந்தார். லெனினுடைய தாயார் மனமுடைந்து போனார்.
லெனின் வழக்கறிஞர் தொழில் மேற்கொள்ள பெத்ரோகிராடு நகருக்கு சென்றார்.அவருடைய குடும்பம் மாஸ்கோ நகரில் குடியேறியது.



5. லெனின் தேர்வு செய்த பாதை

லெனின் பெத்ரோகிராடில் ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையே
நடத்தினார். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன. ஏனெனில்
தொழிலாளர்கள் மிக வறுமை சூழலில் வாழ்ந்தனர். மன்னன் ஜார் ஆட்சிக்கு முடிவு கட்டினால்தான் தொழிலாளர்களுக்கு விடுதலை

 என்பதை உணர்ந்தார் லெனின்,

லெனின். அது குறித்து தீவிரமாகச் சிந்தித்தார். ஏராளமாகப் படித்தார்.
அப்படித் தான் அவர் காரல்மார்க்ஸ் என்பவர் எழுதிய ‘மூலதனம்’ என்ற
நூலைப் படிக்க நேர்ந்தது. லெனினை அந்தப் புத்தகம் வெகுவாக ஈர்த்தது.
மனிதர்கள் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் முதலிய ஏராளமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தேவையும்
 ஒவ்வொரு பொருளின் மூலமே நிறைவேறுகின்றது.
 இயற்கையயோடு போராடித்தான் மனிதன் அந்தப்
பொருட்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதையே உழைப்பு என்கிறோம்.
மனிதர்களின் உழைப்பினால்தான்  செல்வம் உண்டாகின்றது. ஆனால் அந்த
செல்வத்தை ஒரு சிலர் மட்டுமே சுருட்டிக்கொள்கின்றனர்.
உழைப்பாளிகளுக்கோ கூலியாக சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது. இதுவே வறுமைக்குக் காரணம்.


 உழைக்கும் மக்கள் இதை புரிந்து கொண்டு எதிர்த்துப் போராடினால்,

 அவர்களை ஒடுக்குவதற்காக போலீசு, இராணுவம்,
சிறைச்சாலை, சட்டம் போன்றவைகளை பணக்காரர்கள் உருவாக்கி வைத்துள்ளர்.


இதுவே அரசு எனப்படுகிறது. தற்போதுள்ள அரசு பணக்காரர்களுக்கானது.
வறுமையில் வாடும் மக்களைச் சுரண்டுவதே அதன் நோக்கம்.


 உழைக்கும் மக்கள்ஒரு புரட்சியின் மூலம் 
பழைய அரசையும், அநீதியான சட்டங்களையும்
வீழ்த்த வேண்டும். அந்த இடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கான புதிய
அரசையும், சமத்துவத்திற்கான சட்டங்களையும் இயற்ற வேண்டும்.

இதுதான் அந்தப் புத்தகத்தின் சாரம். இந்தக் கருத்துக்கள் கம்யூனிச
தத்துவம் என அழைக்கப்படுகிறது. அடுத்ததாக காரல் மார்ஸும் அவருடைய
நண்பர் எங்கெல்சும் எழுதிய அனைத்து நூல்களையும் படித்து முடித்தார்.லெனின் 


அதிலிருந்து ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்டதீர்மானித்தார் லெனின். தொழிலாளர்களின் புரட்சி ஒன்றுதான் வழி என்று தொழிலாளர்களை ஒன்றிணைத்தார் லெனின்

 அந்தப் புரட்சிக்காகத் தன்வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். 
அதிலிருந்து கம்யூனிஸ்டாக மாறினார்.லெனின்


6. போராட்டமே வாழ்க்கையாக...!

லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு
செல்லத் தொடங்கினார். தொழிலாளர் கூட்டங்களில் பேசினார். மக்களின் அவல வாழ்க்கைக்கான காரணத்தை விளக்கினார். 

தொழிலாளர்க்கிடையே ஒற்றுமையை  வளர்த்தார் லெனின் 
அதை ஒரு புரட்சியின் மூலம்
மாற்றும் சக்தி தொழிலாளர்களுக்கு மட்டுமே உண்டு என்றார்.
இக்கூட்டங்கள் அனைத்தும் இரகசியமாகவே நடந்தன. ஏனெனில் வெளிப்படையாக
கூட்டம் நடத்தினால் மன்னர் ஜாரின் போலீசு அனைவரையும் சிறையில் தள்ளிவிடும்.


லெனினுடைய பிரச்சாரத்திற்கு நல்ல பலன் இருந்தது. அவருடைய கருத்துக்கள்
பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்கள் அனைவரையும் சென்று அடைந்தன.
தொழிலாளர்கள் மெதுவாக விழிப்புணர்வு பெற்றனர். தொழிலாளர்கள் ஒவ்வொருநாளும் 16 மணிநேரம் முதலாளிகளுக்கு உழைத்துக் கொட்ட 
வேண்டியிருந்தது.
கூலியோ மிகமிகக் குறைவு. இதற்கெதிராகப் போராட்டங்கள் வெடிக்கத்
தொடங்கின.

இந்த போராட்டங்களை வழிநடத்தும் தலைவர் யார் என்று தெரிந்து  கொள்ள
இயலாமல் மன்னர் ஜார் அரசு மண்டையைச் குடைந்து கொண்டிருந்தது. லெனின் மீதுசந்தேகம் ஏற்பட்டது.

 அவரை கையும் களவுமாகப் பிடிக்க ஏராளமான உளவாளிகள்
அவரைப் பின்தொடரத் தொடங்கினர்.

லெனின் அவர்களை ஏமாற்றிவிட்டு ரகசிய கூட்டங்கள் நடக்கும் இடத்திற்கு
சென்றுவிடுவார். வலிமையான உடற்கட்டும் புத்திக் கூர்மையும் இதற்கு
உதவின. ரயிலில் செல்லும்போது அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிடும்.
ரயில் நிற்கும். ஆனால் அவர் இறங்கமாட்டார். கையில் ஒரு புத்தகத்தை
வைத்துக் கொண்டு ஆழ்ந்து படிப்பது போல் இருப்பார். ரயில் கிளம்பி
வேகமெடுக்கும். அப்போது அவர் மிக விரைவாக ஓடும் ரயிலில் இருந்து கீழே
குதிப்பார். ஒரு கணநேரத்தில் மாயாஜால வித்தை போல தங்கள் கண்ணெதிரே
லெனின் தப்பி ஓடுவதைக் கண்டு உளவாளிகள் மண்டையைப் பிய்த்துக்
கொள்வார்கள். இதுபோல் பலமுறை உளவாளிகள் ஏமாந்து போனதுண்டு.

7. சைபீ¡¢யச் சிறைவாசம்

1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைதுசெய்யப்பட்டனர்
. ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு
நான்கு ஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது. சைபீரியாவிற்கு

அனுப்புவதும் மரண தண்டனை நிறைவேற்றுவதும் ஒன்றுதான்.        ஏனென்றால் சைரிபீயா என்பது ஒரு பனிபிரதேசம். நிலம் எப்போதும் பனியால் 
மூடியிருக்கும்.எந்நேரமும் பனி பெய்யும். புயல் வீசும். கடும் குளிர் ஆளை சாகடிக்கும்.

ரசிய அரசு புரட்சியாளர்களை சைபீரியாவிற்கு அனுப்பி விடும். அங்கே

அவர்கள் குளிரில் விறைத்து இறந்து போவார்கள்.

ஆனால் சைரிபீயக் குளிரை லெனின் தோற்கடித்தார். அவருடைய உறுதியான உடற்கட்டையை உருக்குலைக்கசைபீரியப் பனிப் பிரதேசத்தால் 

 இயலவில்லை.

அதுமட்டுமல்ல லெனின் தான் காதலித்த கிரூப்ஸ்காயா என்ற பெண்ணைத்
திருமணமும் செய்து கொண்டார். லெனினுடன் சேர்த்து அவரையும் 

சைபீரியாவிற்குநாடு கடத்தியிருந்தது மன்னர் ஜார் அரசு.

சைபீயாரிவில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவர் ஏராளமான புத்தகங்கள்

எழுதினார். அவை ரசியாவில் புரட்சியை எப்படி நடத்துவது என விளக்கும்
புத்தகங்கள். மக்களைத் திரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை. தனது
கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு பத்திரிக்கை அவசியம் என்ற

முடிவுக்கு வந்தார். அதனை ரசியாவிற்குள் இருந்து கொண்டு நடத்த
முடியாது. அரசு அதை அனுமதிக்காது. ஆகவே வெளிநாட்டில் இருந்து ஒரு
பத்திரிக்கையை வெளியிட முடிவு செய்தார். பத்ரதிரிக்கையின் மூலம்

கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கத் தீர்மானித்தார். ஏனெனில்
கட்டுக்கோப்பான கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் புரட்சியை வழி
நடத்தமுடியாது.

1899-இல் லெனின் விடுதலை செய்யப்பட்டார். விரைவில் தான் முன்னரே
தீட்டியிருந்த திட்டத்தின்படி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார்.
‘இஸ்கரா’ என்ற முதல் கம்யூனிச பத்திரிக்கை வெளிவந்தது.


8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்

லெனினுடைய கருத்துக்களை ஆரிதத்த ஊழியர்கள் இஸ்கரா பத்ரிதிக்கையை

நாடெங்கும் கொண்டு சென்றனர். அவை தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாக வழங்கப்பட்டது. ஜார் ஆட்சியின் கொடுமைகளில் 
இருந்து தப்பிக்க வழி தொரியாமல் தவித்தனர் தொழிலாளர்கள். 

லெனினுடைய கருத்துக்கள் புதியதொரு வழியை காட்டியது 
அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இரவு நேரங்களில் வகுப்புகளும் நடத்தப்பட்டன.

அந்த வகுப்புகளில் அரசியல், அறிவியல், வரலாறு முதலியவை விளக்கப்பட்டன.
கம்யூனிச, மார்க்சிய தத்துவமும் போதிக்கப்பட்டது. இப்படி மெதுவாக
கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது. 
தூரத்தில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும்
வழிகாட்டினார்..

1905-ஆம் ஆண்டு மன்னர் ஜாரின் ஒடுக்குமுறை உச்சகட்டத்தை அடைந்தது. முதலாளிகள்

தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தனர். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது
என்ற நிலை வந்தபோது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள்
வறுமை நிலையை மன்னர் ஜாரிடம் சொல்ல மனு ஒன்றைத் தயாரித்தனர். அதை மன்னர் ஜாரிடம் கொடுக்க பேரணியாக சென்றனர்.

 தொழிலாளர்கள் அமைதியாகத்தான் ஊர்வலம் நடத்தினர்.
 ஆனால் மன்னர் ஜார் அவர்களைக் கண்டு பயந்தான். அவர்களைச் சுட்டுக்

கொல்ல உத்தரவிட்டான். பீரங்கிகள் முழங்கின. எந்திரத் துப்பாக்கிகள்
அதிர்ந்தன. பெத்ரோகிராடு வீதிகள் ரத்தத்தில் மிதந்தன.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

கோழைத்தனமாகத் தங்களைத் தாக்கிய படைகளை எதிர்த்துப் போரிட

தொழிலாளர்கள் துணிந்தனர். முதல் ரசியப் புரட்சி எழுந்தது.
வெளிநாட்டில் இருந்த லெனின் புரட்சிக்குத் தலைமை ஏற்க
பெத்ரோகிராடுக்கு விரைந்து வந்தார்.இருந்தாலும்  முதல் ரசியப் புரட்சி
தோல்வியில் முடிந்தது. ஆனால் லெனின் மனம் தளர வில்லை. தன்னுடைய
தோழர்களை உற்சாகப்படுத்தினார். “தோல்வியில் இருந்து பாடம் கற்போம்.
தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே” என்றார்.

புரட்சியை ஒடுக்கிய மன்னர் ஜார், லெனினை எப்படியாவது கொன்றுவிடுமாறு தன்படைகளுக்கு உத்தரவிட்டான்.

 அதனால் மீண்டும் ஒருமுறை லெனின் தன் நாட்டைவிட்டு தலைமறைவாக வெளிநாட்டிற்கு செல்லவெண்டிருந்தது ஆனால் அது மிகவும்
ஆபத்தான வேலை. எல்லைப்புறத்தில் காவல் அதிகமாக இருந்தது. லெனின் கடல் வழியாக பக்கத்து நாடான சுவீடனுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டார்.
அது குளிர் காலம் என்பதால்  கடலின் மேற்பரப்பு பனிக்கட்டி பாளமாக
மாறியிருந்தது. கப்பலையோ, படகையோ அதில் செலுத்த முடியாது. இந்த
நேரத்தில்தான் லெனின் துணிச்சலான ஒரு முடிவெடுத்தார். கடலின் மீது
நடந்து செல்வதே அம்முடிவு.

அது மிகமிக அபாயகரமான முடிவு பணிபாலம்  பல இடங்களில் மிக
மெல்லியதாக இருக்கும். கால் வைத்தவுடன் உடைந்துவிடும். உள்ளே
நடுக்கடலில் விழுந்தால் மரணம் நிச்சயம். அது மட்டுமல்ல, மனிதனை மிரட்டும் கடும் பணிபுயலும் வீசிக் கொண்டிருந்தது.
எதற்கும் அஞ்சாமல் கடல்மீது நடக்கத் தொடங்கினார்.லெனின் 


அவருடன் மூன்று மீனவத் தோழர்களும் பயணம் செய்தனர். ஒரு இரும்புச்
கம்பியினால் பனிப்பாளங்களைத் தட்டிப் பார்த்தபடி மெதுவாக பாதிதூரம்
கடந்துவிட்டனர்.

9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்

1905-க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோதனையான கால கட்டம்
தொடங்கியது. நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்டனர்; சித்திரவதை செய்யப்பட்டனர். லெனினுடைய
குடும்பமும் சித்திரவதைக்கு உள்ளானது. இந்தத் தாக்குதல்கள்
கம்யூனிஸ்ட் கட்சியை கலைக்கும்படிகூறினர்.தொழிலாளர்கள்

இந்தக் கோழைக்களுக்கு லெனின் சரியான பதிலடி கொடுத்தார். புரட்சியில்

தொழிலாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும், கம்யூனிஸ்ட் கட்சியால்
மட்டுமே அதற்கு வழிகாட்ட முடியும் என்றும் சான்றுகளுடன் நிரூபித்தார்.
தொழிலாளர்களின் மனக்கலக்கத்தைப் போக்கினார். மீண்டும் அவர்களை
அணிதிரட்டினார்.

இதே நேரத்தில் ஏகாதிபத்திய நாடுகள் உலகப்போருக்கு ஆயத்தம் ஆகிக்
கொண்டிருந்தன. பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா முதலிய நாடுகள் ஆசிய,

ஆப்பிரிக்க நாடுகளைத் தம் அடிமையாக (காலனியாக) வைத்திருந்தன. இந்த
நாடு பிடிக்கும் போட்டியில் தாமதமாக குதித்தன ஜெர்மனி, ஆஸ்ட்ரியா,

துருக்கி முதலிய நாடுகள். இவை பழைய ஏகாதிபத்தியங்களிடம் உலகைப் பிரித்து தமது பங்கைக் கொடுக்குமாறு கேட்டன 
.இக்கோரிக்கையை மறுக்க பட்டது  உலகை ஏற்கெனவே                கொள்ளையடித்துக் கொண்டிருந்த பிரிட்டன், அமெரிக்கா, பிரான்சு

ஒருபுறமும், புதிதாக கொள்ளையடிக்கப் புறப்பட்ட ஜெர்மனி முதலான நாடுகள்
மறுபுறமாக 1914-ஆம் வருடம் போரில் ஈடுபட்டன. இதுவே முதல் உலகப்

போரானது. இதில் ரசியா, பிரிட்டனை ஆதரித்து ஜெர்மனிக்கு எதிராகப்
போரில் குதித்தது.

10. ஜாரை வீழ்த்திய பிப்ரவா¢ புரட்சி

லெனினும், கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போரைக் கொள்ளைக்காரப் போர்
என்றனர். ஏழை நாடுகளை அடிமையாக்குவதன் மூலம் அவற்றைச் சுரண்டி
பணக்கார நாடுகளின் முதலாளிகள் லாபம் சம்பாதிப்பார்கள்.
தொழிலாளர்களுக்கு இதில் நன்மை ஏதுமில்லை. மேலும் அதற்கான போரில்

கலந்து கொண்டு தொழிலாளர்கள் வீணாக உயிரை இழக்க நோரிடும். இதற்கு
பதிலாகத் தங்களை இதுவரை சுரண்டிக் கொழுத்துள்ள சொந்த நாட்டு
முதலாளிகளுடன் போரிட்டால், தொழிலாளர் வாழ்வில் விடியல் பிறக்கும்

எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் ஒரே மாதிரிதான் சுரண்டப்படுகின்றனர்.
அவர்கள் அனைவரும் கைகோர்த்து ஒன்றுபட வேண்டும். புரட்சி செய்ய
வேண்டும் என்று லெனின் கூறினர்.

ஆனால் போர் வெறி யூட்டப்பட்டிருந்த உழைக்கும் மக்களின் காதுகளில் இது
ஏறவே இல்லை. போர் மேலும் மேலும் உக்கிரமடைந்த போதுதான் அவர்களுக்கு இது உறைத்தது. பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பஞ்சம் 
தலைவிரித்தாடியது.எங்கும் பசி பட்டினி, தொழிலாளர்கள்

 ஜாருக்காக சண்டையிட்டு மடிந்து கொண்டிருந்தனர்.
 அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் மடிந்து
கொண்டிருந்தனர். இந்தக் கஷ்டம் தொழிலாளர்களுக்குத் தான் முதலாளிகளோ போரைப் பயன்படுத்தி எல்லா பொருட்களுக்கும் 
விலை ஏற்றினர். கொள்ளைலாபம் சம்பாதித்தனர்.


லெனினுடைய வார்த்தைகள் எவ்வளவு சரியானவை என்ற மக்கள் புரிந்து

கொண்டனர். இந்தக் கொள்ளைக்காரப் போரை நிறுத்தும்படி படைவீரர்களும்,
தொழிலாளர்களும் கொடுத்த மனுக்கள் குப்பையில் வீசப்பட்டன. மக்களின்
கோபம் எல்லை மீறியது. 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம் புரட்சி

வெடித்தது. ஒரே நாளில் வெற்றியும் பெற்றது. மன்னராட்சி முறை
ஒடுக்கப்பட்டது. ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு அரசு அதிகாரத்தை
முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டனர்.

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த லெனின் ரசியாவிற்கு விரைந்து வந்தார்.
பெத்ரோகிராடு ரயில் நிலையத்தில் இறங்கிய அவர் முன்னே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு நின்றனர். 
அவருடைய பேச்சைக் கேட்பதற்காக அவர்கள்
ஓடோடி வந்திருந்தனர்.

11. சதியை முறியடித்த லெனின்

ஒரு உயர்ந்த மேடை மீது நின்று கொண்டு லெனின் பேசத் தொடங்கினார்.
தோழர்களே! உங்களுடைய வீரத்தினால் கொடுங்கோலன் ஜாரை
வீழ்த்திவிட்டீர்கள். ஆனால் வெற்றி இன்னும் முழுமை அடையவில்லை.
மன்னர் ஜாரின் அதிகாரத்தை முதலாளிகளும், பண்ணையார்களும் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். பணக்காரர்கள் ஏழைக்களைச் சுரண்டுவதையே 

இவர்கள் ஆதரிப்பார்கள்.
பிற நாடுகளைக் கொள்ளையடிக்க போரைத் தொடர்ந்து நடத்துவார்கள். இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு 
உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும். 
சோசலிசம் ஒன்றுதான் தீர்வு. தொடர்ந்து முன்னேறுங்கள்
என்று அறைகூவினார்.

லெனினுடைய வார்த்தைகளை நம்பிய தொழிலாளர்கள் சிறுபான்மையினராகவே
இருந்தனர். பெரும்பாலானவர்கள் முதலாளிகளுடைய நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் 
அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போனது.
 புதிய அரசு போரில் உழைக்கும் மக்கள் வீணாக சாவதைப் பற்றி கவலை

கொள்ளவில்லை. ஏழைகள் பட்டினியால் மாண்டனர். பணக்காரர்கள் தேசத்தின் செல்வத்தை உறிஞ்சிக் கொழுத்தனர். 
நாடாளுமன்றத்தில் அடிதடியும்
ரகளையும் தான் நடந்தது. மக்கள் அதன் மீது நம்பிக்கை இழந்தனர்.
லெனினுடைய கருத்துக்களே சரியானவை என ஏற்கத் தொடங்கினர்.


மக்களை ஒடுக்குவதற்காக புதிய அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. லெனினைக் கொலை செய்யும்படி
படைகளுக்கு கட்டளையிடப்பட்டது. மீண்டும் ஒரு முறை லெனின் தலைமறைவாக செல்ல வேண்டியிருந்தது. 
ஆனால் இந்தமுறை அவர் பெத்ரோகிராடை விட்டு
வெகுதூரம் செல்லவில்லை. எப்படியும் புரட்சி வெடிக்கும் என்று
நம்பினார். அதனால் பெத்ரோகிடின் அருகிலேயே தங்கினார்.

புல் அறுப்பவராக, கூலி விவசாயியாக, என்ஜின் டிரைவராக மாறுவேடத்தில் சிலகாலம் வெவ்வேறு இடங்களில் தங்கினார்.
 ஹெல்சிங்கி நகரில் லெனின் தங்கியிருப்பதாக அரசு சந்தேகப்பட்டது. 

அந்த நகரின் மூலைமுடுக்குகளெல்லாம் வலைவீசித் தேடியது. 
ஒரு இளம் காவல் துறை அதிகாரியிடம் லெனினைப் பிடிக்கும் பொறுப்பு 
ஒப்படைக்கப்பட்டது. இதில் குறிப்பிடவேண்டிய விசயம் என்னவென்றால்,
 அந்த அதிரிகாயின் வீட்டில் லெனின் பாதுகாப்பாகத் தங்கியிருந்தார். 

ஒரு தொழிலாளியின் மகனான அந்த இளம்
காவல் அதிகாரி கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தார்.


மக்களின் கோரிக்கைகளான போர் நிறுத்தம், உழுபவனுக்கு நிலம்,

உழைப்பவனுக்கு அதிகாரம் போன்றவற்றை கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே
செயல்படுத்த முடியும் என மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினர்.

ரசியாவெங்கும் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது. புரட்சிக்கான
காலகட்டம் நெருங்கிவிட்டது. என லெனின் உணர்ந்து கொண்டார். உடனடியாக தொழிலாளர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடங்க வேண்டும்
 என்றும் கட்சிஅதற்கு தலைமை தாங்க வேண்டும் என்றும்
 அவர் கூறியதைக் கட்சியின் மையக்குழு ஏற்றுக் கொண்டது.



ஆனால் மைக்குழுவில் இருந்த பயந்தாங்கொள்ளிகள் இத்திட்டத்தை
எதிர்த்தனர். அதுமட்டுமல்ல, மிக இரகசிமான இந்த திட்டத்தை பத்திரிகைகளுக்கு வெளிப்படுத்தி துரோகம் செய்தனர். 

ஆகவே திட்டத்தில் குறிப்பிட்டிருந்த
நாளுக்கு முன்பாகவே நவம்பர் 7-ம் தேதி புரட்சியைத் தொடங்க முடிவு
செய்தார் லெனின். இத்தகவல் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்களுக்கு
ரகிசயமாக கொண்டு செல்லப்பட்டன.

12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி

1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து
நிற்கும் நாள். முதன் முதலாக சுரண்டல் ஒழிக்கப்பட்டது. அந்த நாளில்
தான். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள்
தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது. அந்த நாளில்தான். அன்றுதான் உலகின்
முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது.

அன்று காலை முதல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன்
அணிவகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள். ரயில் நிலையங்கள், காவல்
நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றப்பட்டன. அரசின்
தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறி
அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி
வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது.
லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.

ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே நாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம்
செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போரினால் நீண்ட காலமாக அமைதி

இழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். ரசியாவின் அனைத்து நிலங்களும்,
வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை
வளைத்துப் போட்டிருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்கு
பகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தெரியாமல் 
மறைந்தது.

உழைப்பாளி மக்கள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர்.
சோவியத்துகள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிர்வாகத்தை
நடத்தின. ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் கூடி ஊருக்குத்

தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டுவார்கள். அதை
அமல்படுத்த ஒரு நிர்வாகக் குழவும் தேர்ந்தெடுக்கப்படும். நிர்வாகக்
குழ உறுப்பினர்கள் கடுமையாக வேலை செய்து அந்த திட்டங்களை நிறைவேற்ற
வேண்டும். சரியாக ஒருமாதம் கழித்து மீண்டும் சோவியத்தின் கூட்டம்

நடைபெறும்.

Monday, March 11, 2013

மனிதனை மிரட்டும் மனித இன பெருக்கம்

மனிதனை மிரட்டும் மனித இன பெருக்கம் 

"சாதிகள் இல்லையடி பாப்பா" எனும் பாரதியின் வரிகளை பொய்யாக்கும் தமிழ்நாடு சாதிகள் பட்டியல்..! உங்கள் பார்வைக்கு........


     
ஆதிதிராவிடர் பட்டியல்

1. ஆதி ஆந்திரர்
2. ஆதி திராவிடர்
3. ஆதி கர்நாடகர்
4. அஜிலா
5. அருந்ததியர்
6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
7. பைரா
8. பகூடா
9. பண்டி
10. பெல்லாரா
11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
12. சங்கிலியர், சக்கிலியன்
13. சாலாவாடி
14. சாமார், மூச்சி
15. சண்டாளா
16. செருமான்
17. தேவேந்திர குலத்தார்
18. டோம், தொம்பரா, பைதி, பானே
19. தோம்பன்
20. கொடகலி
21. கொடடா
22. கோசாங்கி
23. ஹொலையா
24. ஜக்கலி
25. ஜம்புவுலு
26. கடையன்
27. கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
28. கல்லாடி
29. கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
30. கரிம்பாலன்
31. கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
32. கோலியன்
33. கூசா
34. கூத்தன், கூடன்(கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
35. குடும்பன்
36. குறவன், சித்தனார்
37. மடாரி
38. மாதிகா
39. மைலா
40. மாலா
41. மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
42. மாவிலன்
43. மோகர்
44. முண்டலா
45. நலகேயா
46. நாயாதி
47. பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
48. பகடை
49. பள்ளன்
50. பள்ளுவன்
51. பம்பாடா
52. பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
53. பஞ்சமா
54. பன்னாடி
55. பன்னியாண்டி
56. பரையன், பறயன், சாம்பவார்
57. பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
58. பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
59. புலையன்
60. புதிரை வண்ணான்
61. ராணேயர்
62. சாமாகாரா
63. சாம்பான்
64. சபரி
65. செம்மான்
66. தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
67. தோட்டி
68. திருவள்ளுவர்
69. வல்லோன்
70. வள்ளுவன்
71. வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
72. வாத்திரியன்
73. வேலன்
74. வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
75. வெட்டியான்
76. வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

பழங்குடியினர் பட்டியல்

1. ஆதியன்
2. ஆரநாடான்
3. எரவள்ளன்
4. இருளர்
5. காடர்
6. கம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
7. காணிக்கர், காணிக்காரன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
8. கணியர், காணியான், கணியன்
9. காட்டு நாயகர், காட்டு நாயகன்
10. கொக்கவேலன்
11. கொண்டகாப்புகள்
12. கொண்டாரெட்டிகள்
13. கொராகா
14. கோடா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
15. குடியா, மேலக்குடி
16. குறிச்சன்
17. குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
18. குறுமன்கள்
19. மகாமலசார்
20. மலை அரையன்
21. மலைப் பண்டாரம்
22. மலை வேடன்
23. மலைக்குறவன்
24. மலசார்
25. மலயாளி (தர்மபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில்)
26. மலயக்கண்டி
27. மன்னன் (சாதி)
28. மூடுகர், மூடுவன்
29. முதுவர், முத்துவன்
30. பள்ளோயர், பள்ளேயன்
31. பள்ளியன்
32. பள்ளியர்
33. பாணியர்
34. சோலகா
35. தோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
36. உரளி

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்
(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணைகள் எண்:85, நாள் 29-07-2008, எண்:97, நாள் 11-09-2008 மற்றும் எண்:37, நாள்: 21-05-2009)

1. தொழுவ அல்லது துளுவவெள்ளாளர் உட்பட அகமுடையார்
2. அகரம் வெள்ளாஞ் செட்டியார்
3. ஆழ்வார், அழவர் மற்றும் அளவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
4. சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நீங்கலாக)
5. அரயர், நுலயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
6. அர்ச்சகர வேளாளர்
7. ஆர்யவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
8. ஆயிர வைசியர்
9. படகர்
10. பில்லவா
11. பொண்டில்
12. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் நீங்கலாக), பெத்தபோயர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை நீங்கலாக), ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக), கல் ஒட்டர்கள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் நீங்கலாக), நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக), சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டம் நீங்கலாக)
13. சக்காலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக)
14. சவலக்காரர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
15. செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி, வேலூர் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
16. சௌத்திரி
17. கல்வி நிலையங்களில் இருக்கைகள் மற்றும் அரசுப்பணிகளின் இருக்கைக்களுக்கும் இட ஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக தலைமுறையைப் பொருட்படுத்தாமல் ஆதிதிராவிடர் வகுப்பினர்களிலிலிருந்து கிறித்துவராக மாறியவர்கள்.
18. தென்னிந்திய திருச்சபை (முன்னாள் தெ.இ.கி.ஒ) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
19. தொங்க தாசரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சென்னை, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள் நீங்கலாக)
20. தேவாங்கர், சேடர்
21. தொம்மார்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), தோமர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)
22. ஏனாதி
23. எழவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
24. எழுத்தச்சர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
25. எழுவா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
26. கங்கவார்
27. கவரா, கவரை மற்றும் வடுகர் (வடுவர்) (கம்மா, காப்பு பலிஜா மற்றும் ரெட்டி இல்லாத பிற)
28. கௌண்டர்
29. கௌடா (கம்மாளர், கலாலி மற்றும் அனுப்பக் கவுண்டர்)
30. ஹெக்டே
31. இடிகா
32. இல்லத்துப்பிள்ளைமார், இள்ளுவர்(ஈழவர்), எழுவர், இல்லத்தார்
33. ஜெட்டி
34. ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)
35. கப்போரா
36. கைக்கோளர், செங்குந்தர்
37. காலாடி (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலுர் மாவட்டங்கள் நீங்கலாக)
38. களரி குரூப், களர் பணிக்கர் உட்பட (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
39. கலிங்கி
40. கள்ளர், ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வ கோட்டை கள்ளர்கள் உட்பட (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) கூத்தப்பால் கள்ளர்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), பிரமலைக் கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் நீங்கலாக), பெரிய சூரியர் கள்ளர்கள் ( திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக)
41. கள்ளர் குலத் தொண்டைமான்
42. கால்வேலிக் கௌண்டர்
43. கம்பர்
44. கம்மாளர் அல்லது விஸ்வகர்மா (விஸ்வகர்மாலா, தட்டார், பொற்கொல்லர், கன்னார், கருமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சாலா மற்றும் விஸ்வபிராமணர் உட்பட)
45. கணி, கணிசு, கனியர், பணிக்கர்
46. கனியால வேளாளர்
47. கன்னட சைனீகர், கன்னடியார் (மாநிலம் முழுவதும்) மற்றும் தசபலான்ஜிகா (கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)
48. கன்னடியநாயுடு
49. கற்பூர செட்டியார்
50. கரூணீகர் (சீர் கருனீகர், ஸ்ரீ கருணீகர், சரடு கரூணீகர், கைகட்டிக் கரூணீகர், மாத்து வழ கணக்கர், சோழிக் கணக்கர் மற்றும் சுண்ணாம்பு கரூணீகர்)
51. காசுக்கார செட்டியார்
52. கடேசர், பட்டம்கட்டி
53. கவுத்தியர்
54. கேரளமுதலி
55. கார்வி
56. கத்ரி
57. கொங்கு வைணவர்
58. கொங்கு வேளாளர்கள்(வெள்ளாளக் கௌண்டர், நாட்டுக் கௌண்டர், நரம்புக் கட்டிக் கௌண்டர், திருமுடி வேளாளர், தொண்டு வேளாளர், பாலக் கௌண்டர், பூசாரிக் கௌண்டர், அனுப்ப வேளாளக் கௌண்டர், குரும்பக் கௌண்டர், படைத்தலைக் கௌண்டர், செந்தலைக் கௌண்டர், பாவலன்கட்டி வெள்ளாளக் கௌண்டர், பால வெள்ளாளக் கௌண்டர், சங்கு வெள்ளாளக் கௌண்டர் மற்றும் ரத்தினகிரிக் கௌண்டர் உடபட)
59. கோப்பல வேலம்மா
60. கோட்டேயர்
61. கிருஷன்வாகா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
62. குடிகார வேளாளர்
63. குடும்பி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
64. குக வேளாளர்
65. குஞ்சிடிகர்
66. லம்பாடி
67. இலத்தீன் கத்தோலிக்கர்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
68. லிங்காயத் (ஜங்கமா)
69. மராட்டிய (பிராமணரல்லாதோர்) நாம்தேவ் மராட்டியர் உட்பட
70. மலயர்
71. மாலி
72. மானியகார்
73. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் நீங்கலாக) கருமறவர்கள், அப்பனாடு கொண்டையம் கோட்டை மறவர் உட்பட (சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் செம்பனாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் நீங்கலாக)
74. மூன்று மண்டை எண்பத்துநாலு (84) ஊர் சோழிய வெள்ளாளர்கள்
75. மூப்பன்
76. முத்துராசா, முத்துராச்சா, முத்திரியர், முத்தரையர்
77. நாடார்,சாணார் மற்றும் கிராமணி (கிறித்துவ நாடார், கிறித்துவ சாணார் மற்றும் கிறித்துவ கிராமணி உட்பட)
78. நகரம்
79. நாயக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
80. நன்குடி வேளாளர்
81. நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
82. ஓடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
83. ஓதியா
84. ஊற்று வளநாட்டு வேளாளர்
85. ஓ.பி.எஸ்.வேளாளர்
86. உவச்சர்
87. பய்யூர் கோட்ட வேளாளர்
88. பாமுலு
89. பாணர் (இந்த இனம் ஆதிதிராவிட வகுப்பினர்களாக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
90. பாணிசைவன் (வீரக்கொடி வெள்ளாளர் உட்பட)
91. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கதிகாரர்
92. [பன்னிரண்டாம் செட்டியார்]] அல்லது உத்தமச் செட்டியார்
93. பார்க்கவகுலம் (சுரிதிமார், நத்தமார், மலைமார், மூப்பனார், நைனார் உட்பட)
94. பெருக்கி (பெரிகே, பலிஜா உட்பட)
95. பெரும்கொள்ளர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
96. பொடிகார வேளாளர்
97. பூலுவ கவுண்டர்
98. பொராயா
99. புலவர்(கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில்)
100. புள்ளுவர் அல்லது பூலூவர்
101. புசலா
102. ரெட்டி (கஞ்சம்)
103. சாதுச் செட்டி (தெலுங்குச் செட்டி, இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டி உட்பட)
104. [[சக்கரவார்] அல்லது கவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
105. சாலிவாகனா
106. சாலியர், பத்மசாலியர், பட்டு சாலியர், பட்டாரியர் மற்றும் அடவியர்
107. சவலக்காரர்
108. சேனைத்தலைவர், சேனைக்குடியர், இலை வாணியர்
109. சௌராட்டிரா (பட்டுநூல்காரர்)
110. சோழிய வெள்ளாளர் (சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர்)
111. ஸ்ரீசயர்
112. சுந்தரம் செட்டி
113. தொகட்டா வீரசத்திரியர்
114. தொல் கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
115. துளவ நாய்க்கர் மற்றும் வெத்தலக்கார நாய்க்கர்
116. தொரையர்
117. தோரியர்
118. உக்கிரகுல சத்திரிய நாயக்கர்
119. உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா
120. ஊராளிக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் ஒருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் நீங்கலாக)
121. உரிக்கார நயக்கர்
122. வல்லம்பர்
123. வால்மீகி
124. வாணியர், வாணியச் செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுல செக்கலார் உட்பட)
125. வேடுவர் மற்றும் வேடர் (இச்சமூகத்தினர் ஆதிதிராவிடராக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
126. வீர சைவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
127. [வேளர்]]
128. வெள்ளாஞ்செட்டியார்
129. வெலுதொடத்து நாயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
130. வொக்கலிகர் (வக்கலிகர், ஒக்காலிகர், கப்பிலியர், ஒக்கலிக கௌடா, ஒக்காலியா கௌடா, ஒக்காலிய கவுடர், ஒக்காலிய கவுடா உட்பட)
131. வயநாடு செட்டி (நீலகிரி மாவட்டம்)
132. யாதவா (இடையர், வேடுக ஆயர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா மற்றும் அஸ்தந்திர கொல்லா என அழைக்கப்படுகிற தெலுங்கு மொழி பேசும் இடையர் உட்பட)
133. யவன
134. ஏருகுலா
135. மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர், முக்குவார் அல்லது மூகையர் மற்றும் பர்வரிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் நீங்கலாக எந்த ஒரு இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது சீர்மரபினர்கலிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள்.
136. 10 வயதுக்கு முன்பு பெற்றோர்களை இழந்தவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள். சட்டப்படியோ அல்லது வழக்கமாகவோ எவர் ஒருவரும் அவர்கள் மீது அக்கறை கொள்ளாதவர்கல் மற்றும் அரசால் ஏற்பளிக்கப்பட்ட பள்ளிகள் அல்லது அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்கள்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (இஸ்லாமியர்)

(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணை எண்:85, நாள் 29-07-2008.)

1. அன்சார்
2. தக்கானி முஸ்லீம்
3. துதிகுலா
4. லப்பைகள் இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது ஆக இருப்பினும்)
5. மாப்பிள்ளா
6. ஷேக்
7. சையத்
மிகவும் பிற்பட்ட வகுப்பினர்

1. ஆண்டிப்பண்டாரம்
2. பெஸ்தா, சீவியர்
3. பட்ராஜீ (சத்திரிய ராஜீக்கள் நீங்கலாக)
4. போயர், ஒட்டர்
5. தாசரி
6. தொம்மரா
7. எரவள்ளர் (இவ்வினத்தவர்கள் பட்டியலில் பழங்குடியினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
8. இசை வேளாளர்
9. ஜம்புவானோடை
10. ஜங்கம்
11. ஜோகி
12. கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும்)
13. கொரச்சா
14. குலாலா (குயவர், கும்பரர் உள்ளிட்ட)
15. குன்னுவர் மன்னாடி
16. குறும்பர்
17. குறு உறனி செட்டி
18. மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலக்கட்டலவா, வேலக்கட்டல நாயர் மற்றும் புரோனோபகாரி
19. மோண்ட் கொல்லா
20. மவுண்டாடன் செட்டி
21. மகேந்திரா, மேதரா
22. முட்டலகம்பட்டி
23. நரிக்குறவர்
24. நோக்கர்
25. வன்னிய குலச் சத்திரியர்(வன்னியர், வன்னியா, வன்னியகவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னிகுல சத்திரியர் உட்பட)
26. பரவர்,பரதவர்,பரதர் (இச்சமுதாயத்தினர் பட்டியல் வகுப்பினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக, கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
27. மீனவர் (பர்வதராஜகுலம், பட்டனவார், செம்படவர் கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
28. முக்குவார் அல்லது முகயர் (கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
29. புன்னன், வேட்டுவ கௌண்டர்
30. பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கதிகாரர் நீங்கலாக)
31. . சதாத ஸ்ரீ வைஷ்ணவ (சதானி, சட்டாடி மற்றும் சட்டாட வைஷ்ணவ உட்பட)
32. சோழிய செட்டி
33. தெலுங்குப் பட்டி செட்டி
34. தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)
35. தொண்டைமான்
36. வலையர் (செட்டிநாடு வலையர் உட்பட)
37. வண்ணார்(சலவைத் தொழிலாளர்), அகசா, மடிவளா, ஏகாலி, ராஜகுல வேலுத்தடார் மற்றும் ராஜாகா உட்பட) (இச்சமூகத்தினர் ஆதிதிராவிட வகுப்பினராக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
38. வேட்டைக்காரர்
39. வேட்டுவக் கௌண்டர்
40. யோகீஸ்வரர்

சீர்மரபினர் பட்டியல்

1. ஆத்துர் கீழ்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்)
2. ஆத்தூர் மேல்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
3. அப்பநாடு கொண்டையம் கோட்டை மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
4. அம்பலகாரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
5. அம்பலக்காரர் (சூரியனூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
6. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)
7. பட்டுதுர்காஸ்
8. சி.கே.குறவர்கள் (கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
9. சக்கலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள்)
10. சங்கயம்பாடி குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
11. செட்டிநாடு வலையர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள்)
12. தொம்பர்கள்(புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்)
13. தொப்ப குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
14. தொம்மர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
15. தொங்கபோயர்
16. தொங்கஊர் கொறச்சார்கள்
17. தேவகுடி தலையாரிகள்
18. தொப்பை கொறச்சாக்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
19. தாபி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
20. தொங்கதாசரிகள் (கரூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
21. கொரில்லா தோட்ட போயர்
22. குடு தாசரிகள்
23. கந்தர்வ கோட்டை குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
24. கந்தர்வ கோட்டை கள்ளர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
25. இஞ்சிக் குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும்புதுக்கோட்டை மாவட்டங்கள்)
26. ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
27. ஜம்பவனோடை
28. காலடிகள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
29. கல் ஒட்டர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
30. குறவர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்)
31. களிஞ்சி தாபி குறவர்கள்(தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
32. கூத்தப்பால் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
33. கல குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
34. கலவதிலா போயர்கள்
35. கேப்மாரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்
36. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)
37. மொந்த குறவர்கள்
38. மொந்த கொல்லா (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
39. முடலகம்பட்டி (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
40. நோக்கர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
41. நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
42. ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
43. பெத்த போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
44. பொன்னை குறவர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்)
45. பிரமலைக்கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)
46. பெரிய சூரியூர் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
47. படையாட்சி (கடலூர் மாவட்டத்தில் வெள்ளையன் குப்பம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தென்னூர்)
48. புன்னன் வேட்டுவ கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
49. சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
50. சேலம் மேல்நாடு குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
51. சேலம் உப்பு குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
52. சர்க்கரைத்தாமடை குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
53. சாரங்கபள்ளி குறவர்கள்
54. சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
55. செம்பநாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்)
56. தல்லி குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
57. தெலுங்குபட்டி செட்டிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
58. தொட்டிய நாயக்கர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்)
59. தோகமலைக் குறவர்கள் அல்லது கேப்மாரிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
60. உப்பு குறவர்கள் அல்லது செட்டி பள்ளி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், வேலுர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
61. ஊராளிக் கவுண்டர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
62. வயல்பாடு அல்லது நவல்பட்டு கொரசாக்கள்
63. வடுவார்பட்டி குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
64. வலையர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள்)
65. வேட்டைக்காரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
66. வெட்டா குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
67. வரகநேரி குறவர்கள் ((திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
68. வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
இதர வகையினர்

மேற்கண்ட பட்டியலில் இல்லாத அனைத்து சாதியினரும் முற்பட்ட வகுப்பினராகவும், இதர வகையினராகவும் உள்ளனர்.

முற்பட்ட வகுப்பினர்

1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இது. இங்கு முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள் (அடைப்புக் குறிக்குள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

நன்றி-பிறைசூடன்.