தற்போதைய செய்திகள்உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் விவரம் 2011
சென்னை, அக்.24: தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் பெற்ற மொத்த வாக்குகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
அதிமுக - 2,22,42,131 (74.6%)
திமுக - 36,39,625 (12.2%)
தேமுதிக - 6,22,537 (2.1%)
காங்கிரஸ் - 4,88,342 (1.6%)
பாமக - 3,73,327 (1.3%)
பிஜேபி - 2,03,976 ( 0.7%)
மதிமுக - 1,62,992 (0.5%)
சுயேட்சைகள் - 18,06,407 (6.1%)
Monday, October 24, 2011
Sunday, October 2, 2011
பெண்களெல்லாம் பெரியோரில்லையா?
“பெரியோர்களே, தாய்மார்களே...!’’
- இப்படித்தான் ஆகப் பெரும்பாலான பொதுக் கூட்டங்களில், கருத்தரங்குகளில் தலைவர்களும் மற்ற பேச்சாளர்களும் தங்களது பேச்சைத் தொடங்குகிறார்கள்.
குறிப்பிட்ட பேச்சில், தாங்கள் வலியுறுத்தும் கருத்தில் அவர்களில் எத்தனை பேர் உண்மையான விசுவாசத்துடன் இருக்கிறார்கள், எத்தனை பேர் வெறும் கைதட்டல் மோகத்துடன் பேசுகிறார்கள் என்பது மக்கள் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய மர்மம். இங்கே நாம் விவாதிக்க எடுத்துக் கொள்வது அந்த “பெரியோர்களே தாய்மார்களே’’ என்ற தொடக்க விளிப்புச் சொற்களைப் பற்றிதான்.
தங்களது அனுபவ முதிர்ச்சியால் வழிகாட்டுகிற பெரியோர்களையும், அன்றாடம் வயிற்றில் சிசு, இடுப்பில் தண்ணீர்க்குடம், தோளில் குடும்பம், மனதில் துயரம் என சுமந்து கொண்டே இருக்கிற தாய்மார்களையும் விளித்து, வணங்கி பேச்சைத் தொடங்குவது நல்ல நாகரீகம்தான்.
ஆனால், கேள்வி ‘அப்படியானால் தாய்மார்க ளெல்லாம் பெரியோர்கள் இல்லையா’ என்பதுதான்.
ஆண்களை மட்டுமே “பெரியோர்களே’’ என்ற மரியாதைக்கு உரியவர்களாக முன்னிலைப்படுத்துகிற ஆணாதிக்கச் சிந்தனையின் தாக்கம் இதில் வெளிப்பட வில்லையா? உரையாற்றுகிற அந்த மனிதர் ஆணாதிக்கத்தை எதிர்ப்பவராக, பெண்ணுரிமைக்கு உணர்வுப்பூர்வமாய்க் குரல் கொடுப்பவராகவே கூட இருக்கலாம். ஆனால் அவரையுமறியாமல், சிறு வயதிலிருந்தே கேட்டும் பேசியும் வந்த பழக்கத்தின் காரணமாக இவ்வாறுதான் தமது பேச்சைத் தொடங்குகிறார். இவ்வாறு தாய்மார்களை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியது - பொதுமை சார்ந்த தாய் வழிச் சமூக அமைப்பை உடைமை சார்ந்த தந்தை வழிச் சமூக அமைப்பு ஒடுக்கியதன் ஒரு வெளிப்படையான ‘மொழி அடையாளம்’ எனலாம்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ஒரு சிறிய அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நான் பேச அழைக்கப்பட்டேன். சற்று வித்தியாசமாகப் பேச்சைத் தொடங்க எண்ணியவனாக, “நண்பர்களே, சகோதரிகளே’’ என்று விளித்துப் பேசி முடித்தேன். கூட்டம் முடிந்து கலைகிறபோது என்னிடம் வந்த பெண் சிரித்துக்கொண்டே கேட்டாள்: “அதென்ன நண்பர்களே, சகோதரிகளே என்று ஆரம்பித்தீர்கள்? அப்படியானால் நாங்களெல்லாம் உங்களுக்கு நண்பர்கள் இல்லையா?”
சிரித்துக்கொண்டே விடைபெற்றேன் என்றாலும் என் மனதில் ஒரு ஆழமான உறுத்தலையும், மாற்றத்திற்கான ஒரு தொடக்கத்தையும் விளைவித்த கேள்வி அது. அதன் பிறகு இன்றுவரை எந்த நிகழ்ச்சியானாலும், “தோழர்களே” என்றோ, “நண்பர்களே” என்றோதான் தொடங்குகிறேன். இருபாலர் மட்டுமல்ல, மூன்றாம் பாலினத்தவர் அக்கூட்டத்தில் இருப்பின் அவர்களுக்கும் இந்த விளிப்பு பொருந்தும்.
தாய்மொழி மீதான உணர்ச்சி வசப்படுதலுக்கு இடமளிக்காமல் சிந்தித்துப் பார்த்தால், மொழிகூட இப்படி பெண்ணுக்கு எதிராகவே இருக்கிறது அல்லது அப்படி ஆக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும். “ஆண் - பெண் சமத்துவம்” என்று பேசுகிறபோதும், எழுதுகிறபோதும் கூட ஆணை முதன்மைப்படுத்தி விடுகிறோம். “ஆண்-பெண் வேறுபாடில்லாமல் பழக வேண்டும்” என ஒரு உன்னதத் தோழமையை வலியுறுத்திப் பேசுகிறபோது கூட அங்கே ஆண்தான் முன்னால் வந்து நிற்கிறான்.
“செல்வன்” என்றழைக்கப்படும் குழந்தைப் பருவத்தைத் தாண்டிவிட்டால் ஆணுக்கு நிரந்தரமாக “திரு” பட்டம் கிடைத்துவிடுகிறது. பெண்ணுக்கோ முதலில் “செல்வி” அப்புறம் “குமாரி” அதற்கப்புறம் - அதுவும் திருமண உறவு ஏற்பட்டால் மட்டுமே - “திருமதி” என்று அடையாளம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆங்கில மொழியில், பெண்ணுரிமை இயக்கங்களின் தொடர் போராட்டத்திற்கு ஒரு வெற்றியாக ‘மிஸ்’ ‘மிஸஸ்’ என்ற சொற்களுக்குப் பதிலாக “ம்(மி)ஸ்’’ என்ற உச்சரிப்பு வரும் வகையில் ‘எம்எஸ்’ என்று குறிப்பிடும் பழக்கம் வந்துவிட்டது. தமிழில்? “திருமிகு” என்ற சொல் பொருத்தமானது. சிலரே அதை இருபாலருக்கும் பயன்படுத்துகிறார்கள். எப்போது அது பரவலாகப் பொதுப்பயன்பாட்டிற்கு வரும்?
“மனிதன்” என்று குறிப்பிடும்போதும் ஆண் தன்மை மேலோங்கியிருக்கும் உணர்வுதான் ஏற்படுகிறது. “பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்ததுபோல” என்று நையாண்டியாக உவமை காட்டும்போதும் “பட்டிக்காட்டான்’’ பற்றிக் கூறி, பட்டிக்காட்டுப் பெண்ணை மறந்து விடுகிறோம். நையாண்டியில் கூட விலக்கப்பட்டவள் பெண்! “தொழிலாளி வெகுண்டெழுந்தால் அவன் முன் சுரண்டல் கூட்டம் நிற்க முடியாது” என்று உழைக்கும் மக்களின் எழுச்சியை சொல்லும்போதும் தொழிலாளியை ஆணாகவே வரித்துக் கொள்கிறோம். “ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்’’ என்று முழங்குகிறபோது, நம்மையறியாமல் ஏழைக்கும் அடிமைக்கும் கீழாகப் பெண்ணைத் தள்ளிவிடுகிறோம்.
“வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?” -புகழ்பெற்ற இந்தப் பாடல் ஒரு ஆழ்ந்த தத்துவ விசாரணையில் இறங்குகிறது. ஆனால் மனைவி, பிள்ளை, உறவு என்று அடுக்குகிறபோது ஆணுக்கான துணைகள் பற்றிய கவலையாகத்தானே அது வெளிப்படுகிறது?” “நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்” என்ற மற்றொரு பிரபலமான பாடலும் ஆணுக்கு நல்ல மனைவியும் பிள்ளையும் குடும்பமும் அமைவது பற்றித்தான் அக்கறை கொள்கிறது.
பகுத்தறிவுச் சிந்தனைகளை முழுமனதோடு ஏற்று வாழ்பவர்கள் கூட இப்படிப்பட்ட சொல்லாட்சிகளிலிருந்து தப்பிவிட முடிவதில்லை. புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறவர்கள்கூட பேச்சுவாக்கில், “.... இதனால் இன்று எனக்கு பயனில்லாமல் போகலாம். ஆனால் நாளை என் மகன் பயனடைவான். என் பேரன் பயன்பெறுவான்” என்கிறார்கள். உணர்ந்து செய்யவில்லை என்றாலும்கூட, மகளையும் பேத்தியையும் அவர்கள் மறந்துவிடுவது அவர்கள் அறியாமலே சமுதாயத் திணிப்பின் எச்சம் அவர்களோடு ஒட்டியிருப்பதால்தான்.
மொழி எந்த அளவுக்குப் பெண்ணின் எதிரியாக்கப் பட்டிருக்கிறது என்பதற்கு, தெருச் சண்டைகளின்போது வீசப்படும் “கெட்ட வார்த்தைகள்” சரியான ஆதாரம். குறிப்பாகத் தமிழில் உள்ள அத்தகைய சொற்கள் ஆணின் தாயை, சகோதரியை, மனைவியை இழிவுபடுத்தி அதன் மூலம் உசுப்பேற்றுவதாகவே கையாளப்படுகின்றன.
சண்டை என்று வந்தால்தான் என்றில்லை. சாதாரண முறையில் “ஜாலியாக” பேசிக்கொண்டிருக்கும்போது கூட இந்தச் சொற்கள் சர்வசாதாரணமாகப் புழங்குகின்றன. இவ்வளவு ஏன், யாரையாவது எதற்காகவாவது பாராட்டுகிறபோது கூட அவரது தாய் அல்லது சகோதரியுடன் பாலியல் உறவு கொண்டவராக சித்தரிக்கும் சொற்களைப் பொழிந்து புளங்காகிதம் அடைகிறவர்கள் உண்டு.
தாய்மொழியை தாயாகவே கொண்டாடுகிற மண்ணில்தான் இந்த வக்கிரங்கள் “தமிழைப் பழித்தவனை (இங்கே கூட ஆண்!) தாய் தடுத்தாலும் விடேன்” என்ற வீரமிகு கர்ச்சனைகள், மொழி பழிக்கப்படுவது பற்றிச் சீற்றம் கொள்கிற அளவுக்கு தாய் பழிக்கப்படுவது பற்றிக் கண்டுகொள்வதில்லை.
குடும்பப் பொருளாதார நிலைமை காரணமாகவோ, சமூக விரோத சுயநலமிகளின் மிரட்டல் காரணமாகவோ, அறியா வயதில் கடத்திச் செல்லப்பட்டதன் காரணமாகவோ பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களுக்குத்தான் இங்கே “விபச்சாரி” என்ற பெயர். அவர்களைத்தான் “அழகிகள் கைது” என்று வர்ணித்து சில நாளேடுகளில் செய்தி வரும். சில ஆண்களும் சதை வியாபாரத்தில் ஈடுபடுவதாக அவ்வப்போது பரபரப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டாலும், அவர்களுக்கு “விபச்சாரன்’’ அல்லது “அழகன்’’ என்ற தொழிற்பெயர்கள் கிடையாது.
மொழியில் ஆணை முதன்மைப்படுத்திய ஆதிக்கத்தின் உச்சமாகத்தான், மனிதர்கள் கடவுளைப் படைத்தபோது ஆணாகவே வார்த்தனர் போலும். எந்த மதத்திலும் கடவுள் ஆண்பால்தான். பெண் தெய்வங்கள் உண்டென்ற போதிலும், அப்படி “பெண்-தெய்வங்கள்” என்று பிரித்துக் காட்டினால்தான் உண்டு. மற்றபடி தெய்வம், இறைவன், ஆண்டவன் என்ற பொதுச் சொற்களெல்லாம் கடவுளை “எக்ஸ்-ஒய்.” என்றே உருவகிக்கின்றன. (எக்ஸ்-ஒய். என்பது உயிர் வேதியலில் ஆண் உயிரணுக்களுக்கான குறியீட்டு எழுத்தாகும்). நம் வள்ளுவர் கூட “ஆதிபகவன்,” “மலர்மிசை ஏகினான்,” “கெடுக உலகியவற்றியான்” என்றெல்லாம் கடவுளை ஆணாகக் கூறுவதிலிருந்து விலக முடியாதவராகத்தானே இருந்திருக்கிறார்!
இவ்வாறு மொழியும் சொற்களும் ஆணின் அடக்குமுறைக் கருவிகளாய், பெண்ணை ஒடுக்கும் ஆயுதங்களாய் மாற்றப்பட்டது குறித்து ஆய்வு செய்தால் முனைவர் பட்டம் பெறுகிற அளவுக்கு வரலாற்றுத் தகவல்கள் ஏராளமாகக் கிடைக்கும். பாலின சமத்துவத்தைச் செதுக்கி நிலைநாட்டுகிற பேரியக்கத்திற்கு அத்தகைய ஆய்வும் உதவக்கூடும்.

Sunday, August 14, 2011
தமிழன் இந்த சுதந்திரத்தை கொண்டாடலாமா ?????????????????
நீங்கள் தமிழர் தானே இந்திய மண்ணில் உள்ள தமிழகத்தை சார்ந்தவர்கள் தானே நாம் ... நம்மக்கு என்ன சுதந்திரம் கிடைத்தது என்று எண்ணுகிறீர்கள் ......நான் வினவும் விடைகளுக்கு உங்களிடம் விடை இருந்தால் தாருங்கள் நானும் ஏற்றுக் கொள்கிறேன் தமிழனும் இந்தியாவின் சுதந்திரத்தை கொண்டாடலாம்
கேள்வி 1:- தமிழகம் இந்தியாவில் தானே உள்ளது.அப்படி இருக்கும் பட்சத்தில் நமக்கு காவேரி நீர் கிடைக்கிறதா..
கேள்வி 2 :- முல்லைப் பெரியார் அணையிலிருந்து நமக்கு நீர் கிடைக்கிறதா .....
கேள்வி 3 :- கிருஷ்ணா நதிநீர் பிரச்சனை தீர்ந்து விட்டதா....
கேள்வி 4:- ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்களின் வலையை கிழித்து நாசம் செய்வதிலிருந்து விடுப்பட்டுவிட்டோமா ......
கேள்வி 5:-ராமேஸ்வரம், நாகை, கன்னியாகுமரி ,வேதாரணியம் அதிராம்பட்டினம் ஆகிய ஊர்கள் தமிழகத்தில் இல்லையா ??????????? அப்படி இருந்தால் அவர்கள் தமிழர்கள் இல்லையா???? அப்படி இருந்தால் அவர்கள் இந்தியர்கள் இல்லையா???? அவர்கள் மீன்பிடி தொழில் செய்வது தவறா???? அவ்வாறு மீன்பிடிக்கும் பொது பரதேசி சிங்களன் அவர்களை கொள்வதும் மீன்களைப் பிடுங்கி வலையை கிழிப்பதை கேட்க கூடாதா மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கம் இதுக்கே பதில் கூறுங்கள் போதும் நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று மார்த் தட்டி கூருகிறேன் நானும் இந்தியன் நானும் சுதந்திரம் அடைந்து விட்டேன் என்று உரக்க கூறுகிறேன்
வெள்ளக்காரன் நம் நாட்டை விட்டு போய்
அறுவத்தி ஐந்து வருஷம் ஆச்சே
வருமைய ஒளிசிருக்கன்களா
இந்த அறுவத்தி ஐந்து வருசத்துல
காங்கிரெஸ் காரன் ஐம்பத்தி ஆறு
வருஷம் இந்த நாட்டை ஆண்டுஇருக்கான்
ஆனாலும் இன்னும் வறுமை ஒழியல
மீனவர் பிரச்னை தீரல காவேரி பிரச்சனை
தீரல மக்கள் வறுமை ஒழியல
இதுக்கெல்லாம் யாரு காரணம்
இந்த காங்கிரெஸ்காரன்தன் அதனால
இந்த நாட்டை விட்டு இன்னும் வெள்ளைக்காரன்
போகல காங்கிரெஸ் என்ற பேர்ல இன்னும் இந்தியால
தான் இருக்கான் காங்கிரெஸ் எப்போ ஒழியுதோ
தமிழ் மக்களுக்கு எப்போ நியாயம் கிடைக்குதோ
அப்போதான் நான் சுதந்திர தினத்தை கொண்டாடுவேன்
காங்கிரேசை ஒழிப்போம் தமிழன் தன்மானத்தோடு
சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்
அப்படி இல்லை இதில் ஏதும் நமக்கு பதில் கிடைக்கவில்லை என்றால் இந்தசுதந்திரத்தை கொண்டாடும் தமிழன் ஒரு அப்பனுக்கு பிறந்தவன் அல்ல
- முரளிகிருஷ்ணன் சின்னதுரை

Saturday, July 30, 2011
Monday, July 18, 2011
அண்ணா எழுப்பிய கேள்விகள்
திராவிட நாடு இதழில் (16ச்.1.1944) மூட நம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத்திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு:
1) நமது நாட்டில் சைவ சமயத்திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந்ததா?
2) அது எது?
3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?
4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?
5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள்கைகள் என்ன?
6) அதற்கு ஆதாரம் யாது?
7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கட வுளாகக் கொண்டதா?
8) அல்லது தனித் தெய்வமில்லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத்திரமோ அடிப் படையாகக் கொண்டதா?
9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?
10) ஒரு தன்மையா?
11) ஒரு குணமா?
12) சிவனுக்கு உருவம் சொல்லப்படு கிறதே- அது ஏன்?
13) அதற்குப் பெண்டு பிள்ளைகளும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?
14) சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக் கான பெயர்கள் வடமொழியில் இருப் பானேன்?
15) ஆயிரக்கணக்கான கடவுள் களுக்கும் அவர்களது பெண்டு பிள்ளை களுக்கும் வேறு வேறு பெயர்கள் ஏன்?
16) சைவத்திற்கும், சமணக் கொள் கைகளுக்கும், பவுத்த கொள்கை களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
17) ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள் ளுகின்றதா? மறுக்கின்றதா?
18) சைவ சமயாச்சாரியர்கள் என் பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்விகளையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக்கின்றனரா?
19) சமணர்கள் வேத வேள்வியை நிந் தனை செய்தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?
20) சைவ சமயத்திற்குள்ள சித்தாந் தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?
21) சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித்தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?
22) சமயாச்சாரிகள் என்போர்களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?
23) சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர்களையும், சமணர்களையும் துன்புறுத்தியதேன்?
24) துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர்களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப் பதேன்?
25) வடமொழிக் கதைகளையும் வட மொழி புராணங்களையும் தள்ளிவிட்டால் சைவர்களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?
26) சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?
27) எத்தனைக் கடவுள்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன?
28) இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?
29) சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?
30) விக்ரக ஆராதனை உண்டா?
31) வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?
32) ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?
33) சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?
34) சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?
35) சைவக் கோயில்களில் இப் போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படு கின்றதா?
36) அது சைவத்திற்கு முரணானது அல்லவா?
37) முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?
38) கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?
39) ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல் லப்பட்டால் அது ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?
40) கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வரு கிறது?
41) பிள்ளையார் என்ற ஒரு கட வுளுக்குச் சைவத்தில் இடம் இருக் கின்றதா?
42) கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனரா?
43) ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?
44) சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகாபுராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?
45) நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?
46) அவைத் தனித்தனி கடவுள் களா?
47) நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?
48) மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
49) சமணர்கள் கழுவேற்றப்பட்ட தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின் றார்களா? கோயில்களில் இன்னமும் திருவிளையாடல் புராண கதை உற்சவங் கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?
50) திருநீறு எதற்காகப் பூசுவது?
51) இலிங்கத்திற்கும், ஆவுடையா ருக்கும் சொல்லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?
52) ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?
53) இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?
54) கைலயங்கிரி எது? சுப்பிரமணி யன் எது? கந்தன் எது? குமரன் எது?
55) மலையரசன் மகனென்றால் என்ன?
56) இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவைகளால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?
57) இவை இப்படியே நடக்க வேண் டியது தானா?
58) இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?
59) அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்ப லாமா? அல்லது இப்படியே இருக்க வேண்டுமா?
60) சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண்டார்களா?
61) மறுபிறப்பை ஒப்புக் கொள்ளு கின்றார்களா?
62) திதிகளை ஒப்புக் கொள்ளுகின் றார்களா?
63) பிராமணர்களை ஒப்புக்கொள்ளு கின்றார்களா?
64) சமயாச்சாரிகளின் அற்புதங் களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
65) மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்த தாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
66) ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ் வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தலமூர்த்தி தீர்த்த புராணங்களை உண்மை என் பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
67) சைவர்களுக்குச் சரியான முறை எது?
68) சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?
69) வருணாசிரமம் உண்டா?
70) உண்டென்றால் ஆதாரம் எது?
71) இல்லை என்றால் ஆதாரம் எது?
72) இப்பொழுது அமலில் இருப் பதற்குக் காரணம் என்ன?
73) சைவ மடங்கள் எதற்கு?
74) அவைகள் இதுவரைச் சாதித்த தென்ன?
75) அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?
76) இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?
77) இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சமயத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?
78) அருகதை உடையவர் யார்?
79) பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளு கின்றார்களா?
80) வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல்களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?
POSTED BY PASITHAMIZHAN

கூவி அழைக்கிறோம்!
மனித சமூகத்தினரிடம் அன்பு கொண்டு சம நோக்குடன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசை-யுள்ள மக்களை அப்படிப்பட்ட சமதர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்-களை இரண்டு கைகளையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்கச் சுயமரியாதை இயக்கம் காத்திருக்கிறது. அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம்.
ஜாதி, மதம், வருணம், தேசம் என்கிற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம், பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற வருணங்களை ஒழித்து எல்லோரும் எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம்.
ஏழை என்றும் பணக்காரன் என்றும், எஜமானன் என்றும், கூலி என்றும் ஜமீன்தாரன் என்றும், குடியானவன் என்றும், உள்ள சகல வகுப்புகளையும், வேறுபாடுகளையும், நிர்மூலமாக்கித் தரைமட்டமாக்கும் இயக்கம்.
மற்றும் குரு என்றும், சிஷ்யன் என்றும், பாதிரி என்றும், முல்லா என்றும், முன் ஜென்மம் பின் ஜென்மம் என்றும், கர்ம பலன் என்றும், அடிமையையும் எஜமானனையும், மேல் ஜாதிக்காரனையும் கீழ் ஜாதிக்-காரனையும், முதலாளியையும் தொழிலாளி-யையும், ஏழையையும் பணக்காரனையும், சக்ரவர்த்தியையும், குடிகளையும், மகாத்மா-வையும், சாதாரண ஆத்மாவையும் அவன-வனுடைய முன் ஜென்ம தர்மத்தின்படி அல்லது ஈஸ்வரன் தன் கடாட்சப்படி உண்டாக்கினார் என்றும் சொல்லப்படும் அயோக்கியத்தனமான சுயநலங்கொண்ட சோம்பேறிகளின் கற்பனைகளையெல்லாம் வெட்டித் தகர்த்து சாம்பலாக்கி எல்லோர்க்-கும், எல்லாம் சமம்; எல்லாம் பொது என்ற நிலையை உண்டாக்கும் இயக்கமே!
ஜாதி, சமய, தேசச் சண்டையற்று -_ உலக மக்கள் யாவரும் தோழர்கள் என்று சாந்தியும் ஒற்றுமையும் அளிக்கும் இயக்-கம். ஆதலால், அதில் சேர்ந்து உழைக்க வாருங்கள் வாருங்கள் என்று கூவி அழைக்கிறோம்.

Thursday, June 23, 2011
பண்டைய தமிழரின் அளவுகள் - MEASUREMENTS OF ANCIENT TAMIL PEOPLE
பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்..
பழம் நூல்களை ஆய்வு செய்யும்போது எம் தமிழர் எவ்வளவு அறிவாளிகளாகவும், நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள் என்று மலைப்பாக இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது.இப்போதைய தமிழர்களை நினைத்தால்.... சரி விடுங்க..!ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்..
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த் துகள்.
@ நீட்டலளவு..
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை
@ பொன்நிறுத்தல்..
4நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
@ பண்டங்கள் நிறுத்தல்..
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்
@ முகத்தல் அளவு..
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
@ பெய்தல் அளவு..
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - ௧ பொதி
__________________
கால அளவு..
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
__________________
எண்ணல் அளவை..
ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே....கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்

Subscribe to:
Posts (Atom)