Saturday, April 30, 2011

கன்னி தீவு பொண்ண

தான....ந...ந...நா....,தான... ந...ந...நா...தான.....ந.....ந.....ந.....நா...............

தான....ந...ந...நா....,தான... ந...ந...நா...தான.....ந.....ந.....ந.....நா...............

தான....ந...ந...நா....,தான... ந...ந...நா...தான.....ந.....ந.....ந.....நா...............

கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
கட்டு மாற துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துறா....

கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
கட்டு மாற துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துறா....

மத்தாப்பு போல............ சிரிச்சிட்டு போனா......

கித்தாப்பு எல்லாம், மிதிச்சிட்டு போனா.........

இந்த வப்பாட்டிய பாத்து, என் பொண்டாட்டிய மறந்தேன்,
இவா முந்தானைய மோந்து.... நான் மோப்பம் புடிச்சி நடந்தேன்.....


கன்னித்தீவு பொண்ணா...........கட்டெறும்பு கண்ணா............
கட்டு மாற துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துறா......

மஞ்ச சேலையோடு, ஒரு மாசி கருவாடு

ஆட்டம் போட்டு ஆடு, இது வானவில்லு ரோடு

தர்பூசு பழதுக்கே நீ, தண்ணீ காட்டதே............

கடிச்சா கசக்காத சுவீட்டு பீடா நீ........

குடிச்ச ஏப்பம் வரும் கோலிசோட நீ ...................

இடிச்சா உசுரு போகும், தண்ணீ லோர்ரி நீ

அடிச்சா போத வரும், பாண்டிச்சேரி நீ.............

உன் சம்மதத சொன்னா, என் சம்பளத்த தருவேன்
நீ கை நழுவி போனா, நான் கண்ணு தேய அழுவேன்


கன்னித்தீவு பொண்ணா...........கட்டெறும்பு கண்ணா..............
கட்டு மாற துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துறா......

வெண்ணிலா கேக்கு என.. விட்டு தர நாக்கு .
கொள்ளிகட்ட நாத்து, என.. கொப்பளமா ஆக்கு .
தஞ்சாவூரு தட்ட ஏந்தி பிச்ச கேக்காத .
உருட்டி விளையாடும் தாய கட்ட நீ................
வழுக்கி விழ வைக்கும் வாழ மட்ட நீ ..............
மணக்கும் மலையாள கொழா புட்டு நீ ....................
திரும்பி பாக்காத தெனாவெட்டு நீ.......................
இவ கண்ணா குழியோடு, வந்து பல்லாங்குழி ஆடு,
என்ன முத்தமிட்டு மூடு, கொஞ்சம் சத்துணவு போடு ..


கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா .............
கட்டு மாற துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா ...................
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துறா.........

மத்தாப்பு போல............ சிரிச்சிட்டு போனா......

கித்தாப்பு எல்லாம், மிதிச்சிட்டு போனா.........

இந்த வப்பாட்டிய பாத்து, என் பொண்டாட்டிய மறந்தேன்,
இவா முந்தானைய மோந்து.... நான் மோப்பம் புடிச்சி நடந்தேன்.....

கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா ...................
கட்டு மாற துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா.................
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துறா...........

கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா...................
கட்டு மாற துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா.........................
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துறா.......

Saturday, April 2, 2011

வாழ்க்கை குறிப்பு

1909 - காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில், எளிய நெசவாளர் குடும்பத்தில், நடராசன்-பங்காரு அம்மாள் தம்பதியருக்கு செப்டம்பர் 15 அன்று பிறந்தார். இவரது வளர்ப்புத் தாய், சிற்றன்னை இராசாமணி அம்மையார்.

1914 - காஞ்சிபுரம், பச்சையப்பன் தொடக்கப்பள்ளியில் சேர்ந்தார். பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார்.

1927 - காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக சில மாதங்கள் பணிபுரிந்தார்.

1928 - சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்ட்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்து படித்தார்.

1929 - பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டு நகரில் நடந்த, முதல் மாநில சுயமரியாதை மாநாட்டில் பார்வையாளராகக் கலந்துகொண்டார்.

1930 -

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் உதவியால், சம்பளச் சலுகை பெற்று பி.ஏ.(ஆனர்ஸ்) வகுப்பில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, பெற்றோர் விருப்பப்படி, காஞ்சிபுரத்தில் அண்ணாவுக்கும், இராணி அம்மையாருக்கும் திருமணம் நடந்தது.

1931 -

மார்ச் 19ல் தமிழ் மருத்துவர் மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" என்ற ஏட்டில் "மகளிர் கோட்டம்" என்னும் கட்டுரையே இவர் எழுதி வெளிவந்த முதல் கட்டுரையாகும்.

1932 -

நீதிக்கட்சி அரசின் முதலமைச்சரான பொப்பிலி அரசர் தொடர்பு அண்ணாவுக்கு ஏற்பட்டது.

1934 -

திருப்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் முதன் முதலாக தந்தை பெரியாரைச் சந்தித்து உரையாடினார். அன்று முதல் பெரியாரைத் தனது ஒரே தலைவராக ஏற்றார். பி.ஏ.(ஆனர்ஸ்) பட்டம் பெற்றதும், சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பொருளாதார வசதி இன்மையால் மூன்று மாதங்களுக்கு மேல் சட்டப்படிப்பைத் தொடர முடியவில்லை.

1935 -

சென்னையில் உள்ள தொண்டை மண்டல துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகச் சில மாதங்கள் பணியாற்றினார்.
நீதிக் கட்சித் தலைவர் சி. பாசுதேவ் அவர்களோடு சேர்ந்து தொடங்கிய ‘பால பாரதி’ என்ற வார ஏட்டிற்கு ஆசிரியராக இருந்து தொழிலாளர் நலம் பேணும் கட்டுரைகளை வரைந்தார்.

1936 -

சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெத்துநாயக்கன் பேட்டையில் நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.

1938 -

‘விடுதலை’ , ‘குடியரசு’ ஏடுகளின் துணை ஆசிரியர் ஆனார். ‘ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கில ஏட்டிற்கும் துணை ஆசிரியராக இருந்தார். செப்டம்பர் 26ல் பெரியார் தலைமையில் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்று நான்கு மாதம் சிறைவாசம் ஏற்றார்.

1939 -

நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1940 -

மும்பை (பம்பாய்) தந்தை பெரியார் -
டாக்டர் அம்பேத்கர் சந்திப்பின்போது, மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

1942 -

மார்ச் 7 : ‘திராவிட நாடு’ வார ஏட்டின் ஆசிரியர் ஆனார்.

1944 -

சேலம் நீதிக்கட்சி மாநாட்டில், அண்ணா தீர்மானம் மூலம், நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது.

1945 -

டிசம்பர் : "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" என்னும் நாடகம் அரங்கேற்றம். இதை அண்ணா அவர்களே எழுதி அதில் ‘காகபட்டர்’ பாத்திரம் ஏற்று நடித்தார்.

1946 -

ஜூலை 29 : நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அண்ணா பொற்கிழி அளித்தார்.

1947 -

ஆகஸ்ட் 15 : இந்நாளை பெரியார் துக்க நாள்
எனல் பொருந்தாது என்றும், இந்நாள் திருநாளே என்று திராவிடநாடு ஏட்டில் அண்ணா எழுதினார்.

1948 -

ஜூலை 17 : இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறைவாசம் ஏற்றார்.

1949 -

ஜூலை 9 : தந்தை பெரியார் - மணியம்மையார் திருமணம் நடந்தது.
அண்ணாவும் மற்றும் பலரும் திராவிடர் கழகத்தை விட்டுப் பிரிந்து செப்டம்பர் 17இல் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அமைப்பைத் தோற்றுவித்தனர்.
தி.மு.க.வின் முதல் பொதுச் செயலாளராக அண்ணா பொறுப்பேற்றார்.

1950 - "ஆரியமாயை" என்னும் நூல் எழுதியதற்காக ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

1952 - இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டு - இந்தி எழுத்துக்களை அழித்தார்.

1953 -

ஜூன் 15 : ‘நம்நாடு’ நாளிதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
ஜூலை 15 : மும்முனைப் போராட்டத்தில் முன்னதாகவே கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

1955 -

ஜனவரி 14 : அண்ணா, கதை வசனம் எழுதிய ‘சொர்க்கவாசல்’ என்னும் திரைப்படம் வெளிவந்தது.

1956 -

மே 17-20 : திருச்சிராப்பள்ளியில் நடந்த தி.மு.க. இரண்டாவது மாநில மாநாட்டில் பொதுத்தேர்தலில் பங்கேற்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தி, தி.மு.க. பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பொதுமக்கள் அனுமதியைப் பெற்றார்.

1957 - காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூன் 9 : ‘ஹோம்லேண்ட்’ ஆங்கில வார ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

1958 -

ஜனவரி 3 : பிரதமர் நேரு அவர்கள், ஜனவரி 6ல் சென்னைக்கு வரும்போது, கருப்புக் கொடி காட்டத் திட்டமிட்டதால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் ஏற்றார்.

1962 -

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதித் தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.
‘ஹோம் ரூல்’ ஆங்கில வார இதழ் ஆசிரியர் ஆனார்.

ஜூலை 19: விலைவாசி உயர்வு எதிர்ப்பு மறியல் போராட்டத்தில் கைதாகி, வேலூர் சிறையில் பத்து வாரம் கடுங்காவல் தண்டனை பெற்றார். இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. விடுதலையான அண்ணா நாட்டின் யுத்த முயற்சிகளுக்குப் பல உதவிகள் செய்தார்.

1963 -

ஜனவரி : கட்சியின் கோரிக்கை பிரிவினை அல்ல என்பதற்கேற்ற மாற்றம் செய்து கட்சியைக் காப்பாற்றினார்.

நவம்பர் 17 : கட்டாய இந்தி 17ஆவது மொழிப் பிரிவுச் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் நவம்பர் 16 அன்றே கைதாகி, ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

1964 -

ஜூலை 26 : ஆசிரியர் பொறுப்பேற்று ‘காஞ்சி’ வார ஏட்டைத் தொடங்கினார்.

1965 -

ஜனவரி 26 முதல், இந்தியை, இந்திய யூனியன் ஆட்சி மொழியாக்க நாடாளுமன்ற ஆட்சி மன்றக்குழு பரிந்துரை செய்ததை எதிர்த்து,

‘ஜனவரி 26 துக்க நாள்’ என தி.மு.க. அறிவித்தது தொடர்பாக அண்ணா சிறைவாசம் ஏற்றார்.

ஜூலை : சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், கம்போடியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.

1967 - பொதுத் தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பொதுத் தேர்தலில் சட்டமன்றத்தில் தி.மு.க. பெரும்பான்மை இடங்களை வென்றது.

மார்ச் 6 : நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

ஏப்ரல் 26 : தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பதவி ஏற்றார்.

மே 15 : ரூபாய்க்குப் படியரிசித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

ஜூலை 18 : சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ என்று அழைக்க அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்திடும் பெயர் மாற்றத் தீர்மானத்தைச் சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றச் செய்தார்.

ஜூலை 23 : சேலம் உருக்காலைத் திட்டத்தை நிறைவேற்ற, மைய அரசை வற்புறுத்தி, தமிழ் நாடெங்கும் ‘சேலம் எழுச்சி நாள்’ நடத்தினார்.

ஆகஸ்ட் 16 : சீரணி என்னும் அமைப்பினை உருவாக்கினார்.

செப்டம்பர் 19 : சென்னையில் கூவம் சீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

1968 -

ஜனவரி 1 : உலகத் தமிழ் மாநாட்டினை ஒட்டி, டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் வழங்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச்சிலை சென்னை மவுண்ட் சாலையின் (தற்போதைய அண்ணா சாலை) மையத்தில் திறந்து வைக்கப்பட்டது.

ஜனவரி 2 : தமிழ் வளர்த்த சான்றோருக்கு, சென்னை கடற்கரைச் சாலையில் சிலைகள் அமைத்துப் போற்றினார்.

ஜனவரி 3 : உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தை, சென்னை மாநகரில் நடத்தினார். திருக்குறள் ஆராய்ச்சிக்காக ரூ.9 இலட்சம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார்.

ஜனவரி 23 : தாய்மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலம் ஆகிய இருமொழித் தீர்மானத்தைச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தார்.

ஏப்ரல், மே : அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் சென்று வந்தார். அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தில் "சப்-பெலோஷிப்" விருது பெற்றார். வாட்டிகன் நகரில் போப்பாண்டவரைச் சந்தித்தார்.

செப்டம்பர் 8 : அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

செப்டம்பர் 16 : அமெரிக்காவில் உலகப்புகழ் பெற்ற புற்றுநோய் மருத்துவமனையான மெமோரியல் மருத்துவமனையில், டாக்டர் மில்லர் என்பவரால் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

நவம்பர் 6 : சிகிச்சை முடிந்து அண்ணா சென்னை திரும்பினார்.

டிசம்பர் 1 : உடல்நலம் கெட்டிருந்தும் மருத்துவர்களின் ஆலோசனையை மீறி, சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

1969 -

ஜனவரி 14 : பொங்கல் தினத்தில் சென்னை தியாகராய நகரில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அதுதான் அண்ணா கலந்துகொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சி.

ஜனவரி 25 : அமெரிக்க டாக்டர் மில்லர் சென்னை வந்து அண்ணாவுக்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தார்.

பிப்ரவரி 3 : (பிப்ரவரி 2 நள்ளிரவு 12-20 மணி) சென்னையில் இயற்கை எய்தினார்.
அண்ணாவின் உடல், பொது மக்கள் அஞ்சலிக்காக இராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

பிப்ரவரி 4 : அண்ணாவின் உடல் அரசு மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சென்னைப் பல்கலைக்கழகக் கட்டடத்திற்கு எதிரில் மெரினா கடற்கரையில் காலை 11.30 மணிக்கு சந்தன மரப்பெட்டியில் வைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது