Monday, January 3, 2011

பெண் கவிதைகள்


முட்களோடு வாழ்க்கை
சுழலும் ஒவ்வொரு பெண்ணும்
கடிகாரமாய் ...

உள்ளாடும் நினைவுகளில்
ஊசலாய் மனசு...
எனக்காய் துடிக்கிறது கடிகாரம்

உனக்காய் காத்திருந்த கடிகாரம் ....
வயோதிகத்தை உணர்த்துகிறது ..
கோலூன்றிக்கடக்கும்  நொடித்துளிகளில்..
 
ஒவ்வொரு நா(தா)ளும்
ஆணி கொண்டே அறையப்படுகிறது....
கிழியும் தாளின் பின் காத்திருக்கிறது
அடுத்த நாளின் துவக்கம் ..
அழியாத நம்பிக்கைகள் சுமந்து ..

கிழிந்த ஒவ்வொரு தாளிலும்
கழிந்த நாளின் சுவைகள் ...
மௌனமாய் அசைபோடும் மனசு
ஆண்டுகள் கடந்தும் .......

பத்திரப்படுத்திய
நாட்காட்டித்தாளில்
கட்டாயம் படிந்திருக்கும்
உன் நினைவு...

2 comments:

  1. கொலை விழும். எனக்கு தான் கவிதை படிக்க பிடிக்காதுல. அடி பிரிச்சிடுவேன். அப்புறம் இந்தியா பக்கம் தலை வைக்க முடியாது. சவுதில சேக்க விட்டு காலி பண்ணிடுவேன்.
    -மரு.நிசாந்த்

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே. இதயக்கனி பெரிய கவிஞர். ஒட்டக சிவிங்கிய விட பெரிய கவிஞர்என்னோட சிடனைப் பற்றி நானே சொல்லக் கூடாது. நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
    நன்றி. வணக்கம்.
    மரு.நிசாந்த்

    ReplyDelete