Monday, January 31, 2011

நானும் குழந்தையாக


கனவினில் படித்த பாடல் காதருகில் மௌனத்தின் இசையாய்....
என் கவியில் மட்டுமல்ல காதலிலும் புது ராகம் !!
இதயம் இணைந்ததால் எல்லையில்லா இன்பம்

முகில்களின் இடுக்குகளில் பௌர்ணமி ஒளி!
இருளில் நறுமணமாய் மலர்கள் சிரித்திருக்க
எப்போதாவது மட்டுமே உன்னுடனான தருணங்கள்...
உன் கரங்களை இறுக்கமாய் பற்றி தோளோடு தோளாய் நான்!

ஓடையில் துள்ளும் மீன்களும்
உனை சபித்துச் செல்கின்றன - என்
விழிகளுடன் மட்டும் நீ விளையாடி விழிப்பதால்!

தென் மேற்கு காற்று உடலெங்கும் பூசிவர
கைக்குழந்தையாய் எனை அள்ளி  எடுத்துச் செல்லும் நீ...

தூக்கம் கெட்ட விழிகள் தூபம் போட

நான் - நீ  என சங்கீதமாய் சத்தமிடுகின்றன
என் வளையலும் கொலுசும்!

அடர்ந்த இருளில் உறைந்த பனியில்

உதடுகள் தவிப்படைந்து தாளமிட என் இதழ்களில்
உன் முத்தப்புன்னகை!

தவமிருந்த எனக்கு
வரம் கொடுத்த - நீ...
மரத்தை தாங்கும் வேராய் தாங்கினாய் எனை...!!
இப்போது நானும் குழந்தையாக...

No comments:

Post a Comment