Saturday, January 22, 2011

கணக்குப் பதிவியலும்; கவிதையும்

’எண்ணும் எழுத்தும்
கண்ணெனத் தகும்”
 
எனக்குக் கணக்குப் பதிவியல் எண்ணாகும்
எழுத்தென்பது செய்யுளாகும்
 இரண்டிற்கும் வேண்டும் இலக்கணம்
 
கணக்குப் பதிவியலின் விதிகள்
(golden rules of book-keeping) அறியாமல்
கணக்குப் பதியவே முடியாது;
யாப்பின் இலக்கணம் அறியாமல்
யாத்திட இயலாது செய்யுள்
 
பற்று, வரவு விதிகளைப்
பற்றிப் பிடித்தால் கணக்குச் சரியாகும் (tally)
அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை
இசை பாட வைக்கும் யாப்பின் சேனை
 
ஒன்றோ, ஒரு கோடியோ
ஒன்றாகப் பற்றும் வரவும் நேராகாமல்
இடம், வலம் மாறினால்
கடனீந்தோர் கடனாளியாவார்;
கடனாளி கடனீந்தோராவார்!!!!!!!!
 
இசை பாடும் இலக்கணச் செய்யுளில்
அசை மாறினால்; தளை தட்டினால்
வசை பாடும்!

 
“எமக்குத் தொழில் கவிதை” என்றான் பாரதி
கவிதை எனக்குத் தொழில் அல்ல;
கவிதை எனது உயிர்!
 
“கணக்கு எனக்குப் பிணக்கு” என்றான் பாரதி
கணக்குப் பதிவியலே எனக்குத் தொழில்
எனது வாழ்வில் எழில்!

1 comment:

  1. கவிதை எழுதி கணக்கு பண்றது இதுதானோ ....

    ReplyDelete